தேசப்பற்றை மறக்க முடியுமா
ஆலமரமாய் உறுதியாக நின்று
ஆங்கிலேயரை விரட்டிய
அண்ணல் காந்தியடிகளை
மறக்க முடியுமா !
துணி என்று நினைக்காமல்
துணிவாக நின்று
கொடியை காத்த குமரனை
மறக்க முடியுமா !
அச்சமில்லை அச்சமில்லை
என்று பாடி அந்நியனை
அஞ்சி ஓட வைத்த பாரதியை
மறக்க முடியுமா !
நேசக்கரம் நீட்டி
குழந்தைகளை நேசித்த நேருவை
மறக்க முடியுமா !
அயலானை எதிர்த்து
அதிரடியாக போர் தொடுத்து
சபாஷ் போட வைத்த
சுபாஷ் சந்திர போஸை
மறக்க முடியுமா !
அந்நியனுக்கு போட்டியாக
கடல் வழியே வாணிபம் செய்த
கப்பலோட்டிய தமிழன்
வ .உ .சி.யை மறக்க முடியுமா !
இது போன்று
எண்ண ற்ற நல்ல இதயம் கொண்ட
தலைவர்களை வெள்ளையனின்
ஆளுமை பசிக்கு பறிகொடுத்து
பெற்று தந்த சுதந்திரத்தைத்தான்
மறக்க முடியுமா !
கூறுங்கள் மக்களே கூறுங்கள்
நான் சொல்வதை
மறுக்க முடியுமா !