நான் அவனாகிப் போவேன் - உதயா

பிறக்க கூடாத
இனமெனவொன்று உண்டோ ..?
அவ்வினத்தினில் பிறந்துவிட்டால்
நினைக்க கூடாதென
பலவெண்ணம் உண்டோ ..?

இனத்திற்கே விடிவெள்ளியானால்
அவன் இன்பத்திற்கு முற்று பிறந்துவிடுமா ..?
அவன் துன்பம் மட்டும்
முற்றட்டு போகிவிடுமா ..?

அந்த மூங்கில் காடுகளின்
புல்லாங்குழலுக்கு
மூச்சடைத்துவிட்டால்
புல்லாங்குழல் மாண்டுவிடுமா ..?

தனது முதல் முயற்சியில்
முயற்சியே பலியாகிப் போனால்
முயற்ச்சிக்கும் மரண பயம்
தொற்றிக்கொள்ளுமா ..?

பயணத்தின் பாதையில்
இரத்தவாடை வீசினால்
அவன் குருதியின் கொந்தளிப்பு
குறைந்துவிடுமா ..?

அவன் செல்லும் பாதையில்
முட்களே நிறைந்திருந்தால்
அவன் முயற்சியும்
முற்றடைந்து போகுமா ..?

முயற்சியால் அவன் தன் இனத்தோடு
இணைந்தே அழிக்கப்படுவானா ..?
இல்லை தன் இனத்திற்கே
அடையாளம் காண்பானா ..?

அவன் வெற்றியால்
விண்ணில் இடம் தேடுவானா ..?
இல்லை தோல்வியால்
மயானத்தில் இடம் தேவானா ..?

அவன் அவன் அவன்
யார் அந்த அவன் ..?
நான் தான் அந்த அவனா ..?
இல்லை நீதான் அந்த அவனா ..?

முடியாதென்ற உணர்வை
மனதினில் விதைப்பவன்
மனிதன் தானா ..?
இல்லை இவ்வுணர்வற்றவன்
அவனாகிப் போவானா ..?

நான் அவனாகி போவேன்
நீ அவனின்றி போனால் ..?
நீயும் நானாகி போவாயா ?

எழுதியவர் : உதயா (14-Aug-15, 8:27 pm)
பார்வை : 76

மேலே