சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
300 நாட்கள்
கழித்து பிறந்த
குழந்தை
உலகை
பார்த்தது...
இங்கே 300
ஆண்டுகளாய்
என் சுதந்திர தாய்
சேய்களிடத்தில்
இல்லா ஒற்றுமையினால்
பிளவுப்பட்டு
அந்நிய மனிதனால்
நமது சொந்த மண்ணில்
அடிமைகள் ஆக்கப்பட்டது
கொடுமையிலும் கொடுமை .
ஒன்று பட்டால்
உண்டு வாழ்வு...
இங்கே
ஒன்று பட்டதால்
உண்டானது
நம் சுதந்திரம்...
வேற்றுமையில்
ஒற்றுமை
கொண்ட
ஒரே நாடு
எங்கள் இந்தியா.....
இந்திய கொடிக்கு
மரியாதை
கிடைத்தது
அப்துல் கலாம்
அவர்கள் மீது
போற்றப்பட்டதால்....
சுதந்திர இந்தியாவில்
உங்கள் உயிருக்கு
மட்டும் சுதந்திரம்
வாங்கி சென்ற
எங்கள்
முதல் குடிமகனே....
ஆத்மா என்றும்
எங்களுடன் தான்...
உங்களுக்கு எங்கள்
சுதந்திர தின வாழ்த்துக்கள்...
பாரதி சுதந்திரம்
கிடைப்பதற்கு
முன்பாகவே !
விண்ணுலகம் பயணித்தார்....
சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று
முன்கூட்டியே கூறி விட்டு...(ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று...)
அதே போல்
இந்தியா
வல்லரசு(2020)
ஆகும் என கூறிய
நீங்களும்
அதை பார்க்காமல்
முண்டியடித்து
விண்ணுலக
பயணம் செய்கின்றீர்...
ஒவ்வொரு
இந்திய குடிமகனி(ளி)ன்
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
எங்கள் இந்திய தாய்க்கு....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
