எழுது கோல்

எழுத்தென்றும்
சொல்லென்றும்
எழுது கோலின்
எச்சங்கள் ...

துப்பிய வார்த்தைகளில்
நேசிக்கும்
ஒரு சொல்
வஞ்சிக்கும்
மறு சொல் ...

அன்பென்று சொல்லி
குலையறுக்கும்
ஒரு சொல் - அதை
அறிவதில்லை
எழுது கோல் ...

துன்பொன்று
வரும்போதும்
துவண்டு விழாதிரு
மனமே ! ...

எழுதியவர் : Muhil An (15-Aug-15, 3:46 pm)
Tanglish : ezhuthu gol
பார்வை : 91

மேலே