இரவுகள்

மகிழ்ச்சியில் திளைப்பவற்கு
இனிய இரவுகளாய்!...
சோகத்தில் ஆழ்ந்தவனுக்கு
கனியா இரவுகளாய்!!...
இரைகின்ற நெஞ்சங்களுக்கு
தாலாட்டி விடும்இரவுகளாய்!!...
நெஞ்சத்தில் பூத்த பூக்கவியை
மஞ்சத்தில் சந்திக்க இயலாமல்
பஞ்சணையை கட்டிக்கொள்ளும்
இரவுகளாய்!!...
அகத்தில் பதிந்த நினைவுகளுக்கு
பகலில் ஓய்வு கொடுத்து
இரவில் மட்டும் நம்மோடு
உறவாட விடும் இரவுகளாய்!!...
காதல் புரிகின்ற மனங்களுக்கு
தீராத இரவுகளாய்!.....
இரவுகள் இனிக்கின்றன!!!...
இனிய நினைவுகளும் உறவுகளும் சூழ்ந்திடும் போது!....
இரவுகள் கசப்பாய் வெறுப்பாய்
மாறிடும்- நம்
அகத்தோடும் அகத்தினுள்ளும்
ஒட்டாமல் போகின்ற உறவுகளால்!!!!...

எழுதியவர் : (15-Aug-15, 8:53 pm)
சேர்த்தது : yomi
Tanglish : iravugal
பார்வை : 105

மேலே