நீ இன்றி , தனிமையிலே

மாரி காலம் தொலைத்த
பாலை நிலமாய்
மன்னவன் பொன்முகம் தோன்றா(த)
மாதிவள் நாட்களும்...

நிலவது உதிக்கா(த)
அமாவாசை இரவாய்
அவன் பார்வை தொடரா(த)
பாவையிவள் பயணங்களும்...

வண்டுகள் தீண்டா(த)
பூக்களின் ஏக்கமாய்
காதலன் இதழ் சேரா(த)
கன்னியிவள் அதரங்களும்...

மேல் இமை தொடா(த)
கீழ் இமையின் தவிப்பாய்
அவன் அணைப்புக்குள் அடங்(கா)
மங்கையிவள் தேகமும்...

வசந்தம் காணா(த)
பூமியின் நிலையாய்
அவன் வருகை காணா(த)
பெண்ணிவள் உள்ளமும்...

பகலவன் படர்ந்திடா(த)
கமலப் பூக்களாய்
அன்பன் சுவாசம் தழுவிடா(த)
அணங்கிவள் ஜீவனும்...!

எழுதியவர் : கவிப் பிரியை - Shah (16-Aug-15, 9:30 am)
பார்வை : 816

மேலே