மவுன ராகம்
நாடிப் போகும் பூம்பாவையவள்
தினம் சென்று ஒவ்வொரு
பூவைத் தேடும் குறுகிய
தேனுண்ட வண்டு போல்
பாடிக் கொண்டே மெல்ல
இடை நெளிய ஆடிக் கொண்டே
குணம் பார்த்துப் பழகும்
தென்றல் காற்று போல
அவனழகைக் கண்டு அஞ்சி
மச்சு மாடத்தி லேறி
ஆனந்த ராகம் ஊட்டினாள்
வீணை தந்திகளுக்கு
அவனோ! தேனில் விழுந்த
பலாக் கனிபோல மெல்லமெல்ல
வீணை மீட்டும் நாத மிசையில்
மயங்கி காற்றோடு கலந்தே
சுவாசமே உயிரென மலர் தாவும்
வண்டின் ஒலி வீச்சு போல்
செவிமடுத்து இசை மடியிலே
தாலாட்டு பாடலோடு அயர்ந்தான்
தாய் மொழி குழந்தை போல...!