காதல் ஒரு தவிப்பு
உன்னை கண்டதும் என்ன ஒரு ஈர்ப்பு
ஒரே கணத்தில் என் ஊண் உயிர் உன்னில் வார்ப்பு
இனிப்பு கசப்பு எல்லாம் ஆனது உவர்ப்பு
என் சிந்தனை எங்கும் உன் உருவம் பயிர்ப்பு
உன் வனப்பே என் நிழலாகும் நினைப்பு
நீ எனக்காக அசைந்தால் மட்டுமே அடுத்த துடிப்பு
இல்லை எனில் ஜடமாகும் என் உயிர்ப்பு !