கவிதைகள்
விரிப்புகள் ஏதுமற்ற
தரையில்
அமர்ந்திருக்கிறேன்....
நினைவுகள்
நழுவி
நழுவி
கவிதையாய்
விழுகின்றன ......
தனிமைச்சிறையை
உணர்த்தியது
தூரத்து
ஒற்றை நிலா.....
யாருமற்ற நடுஇரவில்
என்னிடம்
அமர்ந்து பேச
நிமிடங்களும்
சில நேரங்களில்
கவிதைகளாகும் .