பனிப் பொழிவுகள்

நம்
காதல்
நீள்வட்டப்பாதையில்
சிலகாலம்
மழைக்காலம்.

ஒருநாள்
நீ
என்னை
நெருங்கையில்

என்
சூர்யோதயப்பார்வையால்
உன்
காதோரக் கூந்தலை
வருடியபோது

உன்
தீவிழிகள்
சொல்லிய
மெல்லிய
ஜூவாலைகலில்
என்
காதலைச் சாம்பலாக்கி
புளூட்டோவாகப்
புறப்பட்டுப் போனவளே..!


அன்றிருந்து
என்
நெஞ்செங்கும்
உன்
நினைவுப் பனிப்பொழிவுகள்
நிரம்பிக்கொண்டிருக்கிறது
நிரந்தரமில்லாத
நினைவுகளோடு...

எழுதியவர் : திருமூர்த்தி (16-Aug-15, 11:11 pm)
பார்வை : 178

மேலே