பூக்கள்

கவிதைகளின்
அணி
காதலின் பரிசு
அழகின் முகவரி
. . . . . . . . . . . . .
பூ காற்றின்
ஆயுள் காலக்
கனவு
உரசிப் பார்க்கலாம்
வண்டுக்கு மட்டுமே
தேன்
கிள்ளப்படுவது
பூக்களல்ல
காம்புகள்
புழு அறிவதில்லை
பூவின் உள்ளிருக்கும்
தேன்
இதழ்களும்
உண்ணப்படலாம்
மறுப்பதில்லை பூ
பூக்கள் மறுப்பதில்லை
வண்புணர்வை - இது
புழுவின் பசி
பூக்களில் தேன் மட்டுமல்ல
உள்ளிருக்கலாம்
பூநாகம்
பூவுக்கு
அணிவிக்கும்
பனி
விரசப்படுத்தாதீர்
அடுத்த வண்டையும்
அனுமதிக்கும் பூ