நிலா -முஹம்மத் ஸர்பான்
தூணில்லாத வானில்
அடிக்கப்பட்ட வட்டவடிவான ஆணி
நிலவும் பெண்ணாகத்தான்
இருக்க வேண்டும் அவளை சுற்றி
ஆயிரம் விண்மீன்கள் காவற்காரர்கள்.
மேகங்கள் பந்தாடும் வெண்பந்து
கடலையும் கண்ணாடியாய் மாற்றி
முகம் பார்க்கும் முன்னோடி.
மாதத்தில் சிலநாட்கள் வானை
விட்டு பிரிந்து விடுவாள் அவளுக்கு மாதவிடாய்.
உன் வயது நாளுக்கு நாள்
குறைகிறது.கடவுள் விதி எழுதும்
போது வரமாய் தந்துவிட்டானோ?
உன் முகம் வெள்ளையாக
இருந்தாலும் உடலுக்கு
கறுப்புச் சேலைதான் பிடிக்குமா?
நிலா நீ உலா செல்லாதே!
மானுக்கு வலை விரிக்கும் வேடன்
வானுக்கு வலை போட்டு விடுவான்