மனிதன் வீரன்தான்

மனிதன் வீரன்தான் -
கையில் கத்தியும் , துப்பாக்கியும் , வெடிகுண்டும்
இருக்கும் வரை !

அடுத்த உயிர்களின் அவஸ்தையில்
மனிதனின் ரசனை சிரிக்கிறது -
உயிர் வதையில்
மனித உயிரின் அஸ்திவாரம் அமைகிறது !

ஏதோ ஓடி ஒளியும் மிருகங்களை எல்லாம்
துரத்தி கொள்வதே
மனித வீரம் !

போராட தெரியாத மனிதனிடம்
போராடி தோற்கிறது
அப்பாவி உயிர்கள் !

கொலைகளை ஊக்குவிக்கிறது
நாக்கு ருசி -
மாமிச வெறி !

உயிர்களின் வலியை உணர தெரியாதவன்
உத்தம வழியில் தொடர்வது
சாதியமில்லாதவையாகவே !

எனவே ,
ஆயுதங்கள் கையில் உள்ளவரை
மனிதன் வீரன்தான் !

எழுதியவர் : வினாயகமுருகன் (18-Aug-15, 9:28 am)
பார்வை : 99

மேலே