நிறங்களே நிச்சயமில்லை

உடல் நிறம் சிவப்பு
உள்ளமோ கருப்பு
இது மனித இனத்தின்
நிதர்சன படைப்பு !

கருப்புக்குள்ளே வெளுப்பும்
வெளுப்புக்குள்ளே கருப்பும் கலந்ததாய்
மனித சிந்தனைகள் !

உயர்ந்த எண்ணங்கள்
நிறத்தால் வெளிப்படுவதில்லை
செயல்களாலே சத்தியம் !

உத்தம குணங்களுக்கு
கல்வியும் , பணமும் , நிறமும் என்ற
எந்த அடிப்படை தகுதியும்
அவசியமில்லை !

ஆள்பவன் சிகப்பும்
அடிமைகள் கருப்பும் என்ற
அந்த சிந்தனைகளையும்,
கறுப்புகள் வென்றிருக்கிறது !

சிந்தனைகளாலும்
செயல்களாலும் மட்டுமே
உத்தமர்கள் மனிதரில் வெளிபடுகிரார்கள் -
நிச்சயமாய் நிறங்களால் இல்லை !

எழுதியவர் : வினாயகமுருகன் (18-Aug-15, 9:08 am)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 57

மேலே