மதங்களில் இல்லை மனிதர்கள்

மனிதனின் பிறப்பும் இறப்பும்
ஒன்றாய் இருந்த பொழுதும்
மதம் என்னும் மார்கத்தில்
மாறுபட்டே நிற்கிறான் !

சடங்குகளிலும் சமுதாய சம்பிராதயங்களிலும்
மாறுபட்டு அணுகுமுறைகள்
வேறுபட்ட நடைமுறைகள்
வித்தியாச படுத்தியே பார்க்கின்றன !

மனிதன் மனிதன் என்று
ஒற்றை சொல்லால் ஒன்றாய் இணைத்த பொழுதும்
தங்களுக்குள்ளே ஒருவரை ஒருவர்
சங்கடப்படுத்தி கொள்கின்றார் என்பதே நிதர்சனம் !

ஆம் ,
ஒவ்வொரு மனிதரும் அவரவர் வழியில்
ஆண்டவனை தொழுத பொழுதம்
மத ரீதியிலான கருத்து தாக்குதல்கள்
நிச்சயம் நியாயமற்றதாகவே !

ஒருதலை பட்சமான
சுயநல அணுகுமுறைகளால் கடவுள் கூட
பேயாய் , பிசாசாய், சாத்தானாய்
உருவகபடுத்த படுகிறான் !

படையலிட்ட சாதமும்
பழமும் ,பிறபொருளும் கூட
ஒதுக்கபடுகின்ற , மறுக்கபடுகின்றன
மதங்களின் மாய போதனைக்குள் !

இதில் ஒதுக்கப்படுவது
மனித உணர்வுகளும் கூட !

கற்பனைக்கும் எட்டாத கருத்துக்கள்
மதங்களின் போர்வையில்
மனிதத்திற்குள் பேதத்தையே
வளர்க்கின்றன !

உயிர் வளர்க்கும் உணவுகள் கூட
எத்தனையோ மதங்களின்
சடங்குகளை தாண்டியே
அறுவடைகள் சாத்தியமாகின்றன !

அவசரகாலத்தில் உயிர்காக்க
உடம்பில் ஊரும் உதிரத்தில்
மதங்களின் மாய சாயம் தெரிவதில்லை -
மனிதநேயம் மட்டுமே வெளிப்படுகிறது !

உறுப்பு மாற்றுக்களிலும் கூட
உதிர பிரிவுகள்தான் ஒத்துபோக வேண்டும்,
மத பிரிவுகள் இல்லை !

உருவங்களில் மாறுபட்ட மனிதன்
உட்புற வடிவத்தில் மாறவில்லை -
உறுப்பும் உதிரத்தின் நிறமும்
ஒத்து போக கூடியதாகவே !

எனவே
மதங்களில் இல்லை மனிதர்கள் -
மனித தன்மையிலேயே மனிதர்கள் வாழ்கிறார்கள் !

எழுதியவர் : வினாயகமுருகன் (18-Aug-15, 8:49 am)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 75

மேலே