என் தத்தை மகள்
உயிர்கொண்டது ஓரிடம்
உருவானது ஓரிடம் - ஆனால்
உன்னால் அவர்கள்
உருமாறவில்லை
உன் தாய் தந்தையாய்...
பாவம் சபிக்கப்பட்டவர்கள்...!!
பெண்ணாய்ப் பிறந்தும் இப்புவியிலே
வெறுமையாயிற்று என் கருவறை...
உன்னை அள்ளியெடுத்து
உன் பாதம் முத்தமிட்டு
உன் உச்சி முகர்ந்த வேளையில்
என் மனக்கோவிலின் கருவறையிலே
நீ வந்தமர்ந்தாய் என் சாமியாய்
தத்தை(து) மகளே...உன் தாய் நான்
உன்னைப் பெறாதவளாயினும்
பெரும் வரம் பெற்றவள்......!!
~ தப்தி செல்வராஜ்

