interstellar

அடந்த புல்லகள் நடுவே
ஒர் அழகிய வீடு!!

பத்துவயது குழந்தை அவள்.
பாசம் காட்ட அருகில் தந்தை!
எண்ணூறு வருடம் கடந்தாலும்
எட்டிகூட போகாத எண்ணம்
மிகவும் விந்தை!!

உலகை காப்பாற்றும்
விஞ்ஞானியாய் அவள் தந்தை!
உலகை விட்டு வெகுதூரம்
போகவேண்டும் என்று சொல்கிறார்
அவர் அவளுக்கு!


போகாதே!!போகாதே என்று
அவளும் கதறி அழ,
போய்விட்டார் மனம்தேத்தி
அவரும் உலகை காப்பாற்ற!!

தனிமையிலே இவளுக்கு வீடு
வெறுங்காடாய் ஆனது!!
தன் சொந்தம் இருந்தும் தந்தை
நினைப்பிலே மனம் கரைந்தது!

பலவருடம் கழிந்தும்
வரவில்லை தந்தை!!
பலவாராய் கதறி விட்டாள் தேத்த
முடியவில்லை மனதை!!


வான்ஒலிஅலையில்
இவள் அவரிடம் கேட்டுருந்தால்
அவர் கண்ணீர் வருகையில்
இவள் மனது உடைந்தால்!
"தந்தையே!!
நினைவில் உள்ளதா!!?
போகும் போது என் வயது நீ
அடையும் நேரத்தில் நான் உன்
அருகில் இருப்பேன் என்றாய்!!"
தந்தையே,இன்று என் வயது
உன் வயது!!

என்னை தனிமையிலே சாகடிக்க
சென்று விட்டாயோ என்றுசொல்லி
தொடர்பை நிறுத்தினால்!!

இவள் உடல்நிலை வயதால்
மோசம் அடைந்தது!!
இனியும் பார்ப்பேனோ என்ற
நம்பிக்கை மனதோடு புதைந்தது!!

தோல் சுருங்காமல்,
வயதில் 124வருடமாய்
வான்வெளியில் வாழ்ந்தவர்
பூமி திரும்பினார்!!

ஏதோ,ஒரு மருத்துவமனையில்
தன் பிள்ளையை 124 வருடம்
கழிந்து பார்த்ததில்
கண்ணீர் வழிந்தோடின
இருவருக்கும்!!

அவள் சொன்னாள்!
இன்றோ நாளையோ
இறந்துவிடுவேன்!!

பெற்றோர் இறப்பதை
பிள்ளைகள் பார்க்கலாம்!-ஆனால்
பிள்ளை இறப்பதை பெற்றோர்
பார்க்க வேண்டாம்!!

போய்விடு தந்தையே !!
உன்னை கடைசி நிமிடத்தில் பார்த்ததே ஆனந்தம்!!

நான் இறந்தால் என்னை
புதைக்க என் மகன் உண்டு!!
நீ இறக்க வேண்டாம் .நீயில்லையேல்
நாட்டை காப்பாற்ற யார் உண்டு??

போ!தந்தையே!!போ!!

எழுதியவர் : (18-Aug-15, 9:24 pm)
பார்வை : 79

மேலே