நினைப்பு கவிதை

நினைப்பதற்கு ஏதுமில்லையென்று
நிம்மதியாயிருக்கவே
நினைக்கத் தோன்றவில்லை
நினைப்புகள் மெல்ல மெல்ல
அரும்பிக் கொண்டேயிருக்கின்றன.
அது எப்பொழுதும் ஒரே நினைப்பாக
நினைவுக்கு வருவதில்லை
அடுக்கடுக்கான மடிப்புகளாய்
அலையலையாய் நிமிடந்தோறும்
வந்துக் கொண்டேயிருக்கின்றன
யாரேனுமொருவர் நினைவுப்படுத்தி
சுடராய் தூண்டிவிடுகின்றார்கள்
புதிய புதிய தகவல்களோடும்
பிர்ச்சினைகளோடும் தாவித் தாவி
நினைவுகளாய் மலர்கின்றன
எப்பொழுதும் நினைவடுக்குச்
சேமிப்பு மையத்தில்
சேகரிக்கப்பட்டவைகள் வெளியாகி
நினைவுப்படுத்தி பேச வைக்கின்றன
கணநேரமேனும் நினைக்காமல்
இருக்கலாமென்றாலும்
நினைக்கவே செய்கின்றன
அந்தந்த முக்கிய நினைப்புகள்.
நினைப்பதற்கு ஏதுமில்லையென்று
நிம்மதியாயிருக்கலாமென்றால்
ஏதேனுமொன்று மீண்டும்
நினைவுக்கு சட்டென வந்து வந்து
நினைக்கவே தோன்றுகின்றன
ஓய்வில்லாமல் எந்தவொரு….?.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (19-Aug-15, 6:55 am)
பார்வை : 308

மேலே