பெண் என்பவள் யாதெனில் - உதயா

பெண்
பூப்படையும் முன்னே
அவள் தாயின் கருவறை
உறவுகளுக்கு தாயாகுபவள் ...!
அவள் நேசிப்பவருக்காக
ஆசைகள் அனைத்தையும்
மலர்ந்த மனதோடு
மரித்துக்கொள்பவள் ...!
பெற்றோரின் சண்டைகளுக்கு
தீர்வு காண்பதிலும்
குடும்ப சுமையை குறைக்க
வழியினை தேடுவதிலும்
மதியுக மந்திரியாய் திகழ்பவள் ...!
நட்பில் ஓர் உன்னதமாய்
உலகம் காணா
நட்பு இலக்கணமாய்
வாழ்பவள் ...!
ஓர் நல் மனைவியாய்
தாயாய் மருமகளாய்
அண்ணியாய் அத்தையாய்
சிந்தனை மிகு பாட்டியாய்
கச்சிதமாய் காட்சியாபவள் ...!
தன் வண்ணமயமான கனவுகளை
வண்ணத்துப்பூச்சிக்கு தாரைவார்த்து
தருபவள் ...!
தன்னை கல்கொண்டு எறிபவரை(ளை)யும்
வஞ்சமில்ல அன்பு கரம் கொண்டு
ஆதரிப்பவள் ...!
தன்னை துரத்த என்னும்
தொல்லைகளுக்கு மோட்சம்
தரும் புத்தன் அவள் ...!
சுடும் பாறைகளுக்கு இடையில்
சுனை தோண்டி
வறண்ட பாலைவனத்தில்
வற்றா அருவி அமைப்பவள் ...!
இடைவிடா கனந்த மழையில்
மண்கொண்டே அற்புதமாய்
பொன் மாளிகை கட்டுபவள் ..!
சீற்றத்தால் எழுதும்
அபாய அலைகளில்
அன்பால் அதிசய
சித்திரம் வரைபவள் ...!
பொறுமையெனும் தவம் புரிந்து
வாழ்கை தத்துவத்தை வரமாக
அகிலத்திற்கு வாரி கொடுப்பவள் ...!
அவள் கவியின்
உணர்வுகளுக்கு
உயிர் கொடுக்கும் துடிப்பு ...!
அவள் காலத்தால்
கரைக்க இயலா
காவியத்தின் கற்பகிரகம் ...!
அவள் கவிஞ்சனின் கற்பனையில்
அயரா காட்சியாகும்
கலைமகள் ...!
அவள் பெண் என்ற
இரு எழுத்துக்குள்
அடங்க முடியா
சொர்க்க நரகத்தின்
மறுபிம்பங்கள் ...!
அவள் இன்னும்
எழுதி முடிக்கப்படாத
படித்து உணரமுடியாத
புவியுலக அகராதி ...!