சசிபெருமாள் மரணமும் மது ஒழிப்பும்

மது ஒழிப்புக்காக
தன் உயிரையே
மாய்த்துக்கொண்ட
மாமனிதன்
மது ஒழிப்புக்காக
பலமுறை
உண்ணாவிருதமிருந்த
உன்னதமனிதன்
மது ஒழிப்புக்காக
தன் வாழ்கையே
தியாகம் செய்த
தியகமனிதன்

இவரின் இறப்பு
வெறும் துக்கச்செய்தியல்ல
மதுகுடிப்பவர்களின்
மது ஆலை அதிபர்களின்
மதுவிற்கும் அரசின்
தூக்கத்தை தூக்கும் செய்தி !

வழக்கமாக
சாரயத்தால்தான்
மனிதர்கள் சாவார்கள்
இன்று
சசிபெருமாளால்
சாராயம் செத்துக்கொண்டிருக்கிறது !
சத்தியமாய்
சாராயம் முழுவதுமாய் செத்துபோகும்
சசிபெருமாளின் பெயரும்
நம்சமூகம் வாழும்வரை வாழும் !

எழுதியவர் : சூரியன்வேதா (19-Aug-15, 3:43 pm)
பார்வை : 70

மேலே