மனிதம் ஆவீர்

பொய்மை வெல்வதாய்
நினைத்து சாகும்.
உண்மை கவலையாய்
இருந்து வெல்லும்.

தீமைகள் எட்டுத்திக்கும்
பரவி கலைந்திடும்.
நன்மை ஒர்வழியில்
நின்றே நிலைக்கும்.

பாவங்கள் இனித்து
கசந்தே போகும்.
புண்ணியங்கள் கசந்தும்
மருந்தாய் ஆகும்.

அராஜகம் ஆர்ப்பரித்து
அழிந்து போகும்.
அகிம்சை அமைதியாய்
வென்று உயரும்.

சுடுகாட்டு பொட்டலுக்கு
வழி திறந்தவெளி.
ஆலய அமைப்புக்கு
வாயில் கோபுரம்.

ஆதலால், மானிடரே
நல் மனது கொள்வீர்.
அரிய இப்பிறவியில்
மனிதம் ஆவீர்.

எழுதியவர் : செந்ஜென் (20-Aug-15, 1:08 am)
பார்வை : 97

மேலே