கடவுள்

எல்லாம் அவன் செய்தது

எதற்கு எது வண்ணம்
ஏற்றது என்பதுவும்
எத்துணை அளவு
சாயல் என்பதுவும்
அவன் வகுத்தது.

எனில் அழகும் மெருகும்
வனப்பும் சாயலும்
ஓவியம் கண்
ஒளிர்வதும் மிளிர்வதும்
இயற்கையின் நியதி,

ஓவியம் வசம் ஒன்றுமில்லை

ஓவியங்கள்
மெருகேறும் உருவங்கள்
அரங்கேறும் காவியங்கள்

ஆவதும் ஆகாமல் போவதும்
ரசிப்பவன் பார்வையில்
லயித்தவன் முயற்சியில்

அதுவே அவன் தரும் வரம்
அமையும் இடம் பொருள் ஏவல்
அதற்கான தரம்

எல்லாம் அவன் செய்தது ....

எழுதியவர் : செல்வமணி (19-Aug-15, 11:11 pm)
Tanglish : kadavul
பார்வை : 81

மேலே