வெளிப்படு விருட்சமாய்
உன்னுள்ளே
புதைந்துள்ளன
கேள்விகளும்
கேள்விக்கான
விடைகளும்...
உன் தேடல்
விழிப்பதும்
வீழ்வதும்
உன்னாலே
உன்னை உணர
வெளியிலென்ன
தேடுகிறாய்
இயற்கையின்
இரகசியங்களை
இயைந்து நீ தேடு
ஓர்...
ஒப்பற்ற தேடலே
வேர்களுக்கு
நீரின் இருப்பை
உணர்த்தும்...
மண் கீறி
வெளிப்படும்
பெரும் விருட்சமாய்
ஓர் நாள்
வெளிப்படுவாய்
உன்னை ..நீ
உணரும் போது...
---------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்