மழைகாலம் -கிராமம்

அதிகாலை மூனு மணி
சாமம் அடங்கி
வெள்ளியும் சாஞ்சிருச்சி
சேவலும் கூவி
பசுவும் முழிச்சிருச்சி
பழைய கஞ்சி ஊத்திக்கிட்டு
அப்பனும் போயிட்டாரு

முத்தம் கூட்டி சாணி தொளிச்சி
அரிசி மாவுல கோலமும் போட்டு
ஆத்தாவும் கிளம்பிடுரிச்சி

கண்ணக் கட்டிகொண்டு கருமேகம் வடக்கே வர
தெக்க போன ஆத்தாவுக்கு
கோணி பை எடுத்துட்டு நா போன
ஏ புள்ள நனைவானு-வீட்டுக்கு
ஆத்தா ஓடி வருது

உச்சி நனைந்த உடம்ப
முந்தாண முனி எடுத்து
உச்சந்தல சூடு பறக்க தேச்சிக்கிட்டே .......
ஏயா!
ஆத்தா நனைவான கோணி எடுத்தாண்ட

ஏ மகராசா !

நீ போயி

கம்மல் வித்து வாங்குன கூர எல்லாம்
காத்துல போக போது
போற கூரைய பொறுக்கி வையி
போன அப்பே வந்தவுடன கூர மேய சொல்லுவோம்
காலாற நா போனனா
எடுக்குற காளா ராவுக்கு சரியா வரும் .............
நீ கோணிய மூடிக்கிட்டு ஓடிரு ..............

வயக்காடு நிரம்பிருச்சி
கம்மாவும் பெருகிருச்சி
நா வளத்த முருங்கையும் சாஞ்சி
அப்பே படுத்த கட்டுலும் ஒடஞ்ச்சிருச்சி
ஆச ஆசையா கட்டுன மண்வீடும் கரஞ்ச்சிருச்சி
கோவத்துல வானத்த பாத்து நா மழைய திட்ட
இடியும் மின்னலும் கண்ணையே பரிச்சிருச்சி ................

வேலைக்கு போன அப்பனும் வரல
வயலுக்கு போன ஆத்தாளும் வரல
கோணி மூடிக்கிட்டு கோழி கூட்டுல படுத்துட்டே

ஏயா மாரி எங்கையா இருக்க ..................ஏ ஆத்தாளும் அப்பனும்


ஒரு மாரி தண்ணீரோட...........நீராக
இன்னூரு மாரி கண்ணில்லா கண்ணீரோட...... தண்ணீரோடு
-தொடரும்

எழுதியவர் : மடந்தை-ஜெபக்குமார் (19-Aug-15, 7:53 pm)
பார்வை : 312

மேலே