எழுத்தைப் பகரு
எழுதுகோல் நீ...!
எழுத்துரு நான்...!
நீ எழுதும் எழுத்து
நமது முகூர்த்த
ஓலையா?
இல்லை
எனது ஈமக் கிரிய
காகிதமா??
நீ எழுதும் இடம்
நமக்கான கல்வெட்டா?
இல்லை
எனக்கான கல்லறையா??
நீ எழுதும் நேரம்
நம் வாழ்வின்
தொடக்கமா?
இல்லை
என் வாழ்வின்
முடிவா??
என் அன்பு
பகன்று விட்டேன்.
உன் அன்பை
என்னுருவாய்
எழுத வேண்டி
ஏங்கி நிற்கிறேன்!
நீ எழுதப் போகும்
எழுத்தானது
வெறும் எழுத்தல்ல...!
அதுவே என் தலையெழுத்து...!
உன் மசி கசியும்
நொடிக்கு காத்திருக்கிறேன்...
கண்ணுக்கு புலப்படாத
எழுத்துருவாய்
காகிதத்தின் மேல்!