காதல்

ஓவ்வொருவர் மனதிலும்

நெஞ்சம் நிறைய

நினைவு நுரைகள் மிதக்கின்றன ....சிலரது மனதில்

கடல் அலைகளின் ஓசையில்

அவர்களது காதலியின்

கொலுசு ஓசை

நினைவு ஓசையாக

தோன்றும் .....சிலரது மனதில்

கடற்கரை மணலில்

காதல் தோன்றி

விண்ணுலகம் வரை செல்லும்

நினைவுட்டும் காதல் ஒவியங்கள் ......கடற்கரை மணலில் முறித்த

காதலை மறக்க முடியாமல்

கண்ணீர் ஒவியங்களாக

சிலரது மனதில் காதல் ......காலங்கள் மாறலாம்

காதலர்கள் மாறலாம்

அவர்கள் வரைந்த

காதல் ஒவியங்கள் என்றும்

கடற் கரையில்

கலந்துள்ளது ........


அவர்களின் கால் தடங்கள் வரும்

காதலர்களுக்கு கண்காட்சி ....


காதலர்கள் வடித்த

கண்ணீர் துளிகளால் தான்

கடல் நீர் உப்பு நீராக

உருவு எடுத்து உள்ளது


ஓவ்வொரு நொடியும்

காதலர்கள் பேசிய

கிதங்களால் தான்

கடலின் இதயம் துடிக்கிறது

எழுதியவர் : மகாலட்சுமி ஸ்ரீமதி (20-Aug-15, 5:10 pm)
Tanglish : kaadhal
பார்வை : 110

மேலே