உலக மொழிகளின் சுனாமி - தமிழ்
பேரும் புகழும் அடைந்த எம்முயிர் மொழி
பண்டைய நாகரிகம் சான்றிட்ட மொழி
பண்பாடு பயன்பாடு தன்னகத்தே கொண்டு பாரெங்கும்
பறை சாற்றப்படும் உன்னத மொழி எங்கள் உயிர் மொழி
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனமுண்டு
என்பதை உணர்ந்தே உருவான உண்மை மொழி
வேற்று மொழி சொற்களையும் உள்வாங்கி செல்கிறது
சுனாமியாக அங்கங்கே சேர்க்கும் எங்கள் செந்தமிழ் மொழி
சமஸ்கிருதம் லெமுரிய வட இந்திய மொழி என அனைத்தும்
ஏற்று ஈடின்றி கோலோச்சும் எங்கள் மொழியே தமிழ் மொழி
தமிழினத்தின் பெருமையினை தரணியெங்கும் பறை சாற்றும்
அழகுத்தமிழ் அலங்கரிக்கும் சுந்தரத்தமிழ் என்றும் வாழியவே!