ஒரு நெருப்பு தாருங்கள்
ஒரு நெருப்பு தாருங்கள் !!!
உலகத்துக் குப்பைகளை
உருக்கி எரிக்க - ஒரு
நெருப்பு தாருங்கள் !!
அருயாமை இருள் நீக்க
அறிவுக் குன்றத்தில் ஏற்றி வைக்க
அழகாய் - ஒரு
நெருப்பு தாருங்கள் !!
காதல் குளிர்ச்சியில்
கடகடத்து நிற்கின்றேன்
குளிர் காய்ந்து கொள்ள - கொஞ்சம்
நெருப்பு தாருங்கள் !!
அந்த நெருப்பு
கச்சா எண்ணையில் எரியும்
நெருப்பாக இருக்க வேண்டா !!!
மண்ணெண்ணெய் .....?
நெய்....?
அதுவும் வேண்டா !!
கண்ணீரால் எரியும்
நெருப்பு தாருங்கள் !!
வீண் பொய்களும்
அச்சங்களும்
வீரமில்லா நெஞ்சங்களும்
சாரமில்லா மூளைகளும்
அதற்கு விரகாகட்டும் !!
ஒரு நெருப்பு தாருங்கள் !!
அந்த நெருப்பைப்
பற்ற வைக்கத்
தீக்குசிகள் வேண்டா !!
மானிட விரல் நுனியிலிருந்து
அந்த நெருப்பின்
பொறிகள் புறப்படட்டும் !!
உராய்வில் தோன்றாமல்
அந்த நெருப்பு !!
உயிரில் தோன்றட்டும் !
அந்த நெருப்பு
தீபம் என்றால் !!!!
மார் விட்டு எழும்
வீரமும் வேட்கையும்
அதற்குத் திரிகளாகட்டும் !!
அக்கினியில் வேறுபாடு
காணாத எனது
கவித் தகப்பனின்
வழி நிற்கிறேன் !!
சிறிய பொறியானாலும் சரி !!
சீரிய சூரியனானாலும் சரி !!
ஒரு நெருப்பு தாருங்கள் !!
நெருப்பால் எதுவும் உருகும்.....!
ஒரு மாறுதலுக்கு...,
நெருப்பையே உருக்கிப்
பேனாவின் மையாக்கிப்
புறப்படுகிறேன் !!!
அதற்கொரு
நெருப்பு தாருங்கள் !!!
வித்தக இளங்கவி
விவேக்பாரதி