தனிமை தேடி
மேகத்தில் கூடொன்று அமைத்து
நான் தனி வாசம் கொண்டால் என்ன?
நிலவுக்கு வண்ணங்கள் கொடுத்து
என் கூட்டை அலங்கரித்தால் என்ன?
பறவைகள் சிநேகம் சேர்த்து
நான் கவிகள் இசைத்தால் என்ன?
மலர்களின் அமிர்தம் சமைத்து
நான் உண்டு மகிழ்ந்தால் என்ன?
மழைத்துளிகள் நித்தம் சிலிர்த்து
என்னை தினம் எழுப்பினால் என்ன?
வானவில்லின் நார் ஒன்று எடுத்து
நான் விண்மீன்கள் கோர்த்தால் என்ன?
கவலைகள் தோல்விகள் மறந்து
நான் இவ்வுலகம் தாண்டினால் என்ன?
பொய்மை ஏமாற்றம் தவிர்த்து
என்னை நானே காதலித்தால் என்ன?
- பாரதி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
