புடவை
@@@@ கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் சின்னச்சிறு ஊடல் @@@@
என்னங்க, என்னை விட என் புடவைகள் தான் உங்களை அதிகமாக நேசிக்கின்றன.
எப்படி சொல்கிறாய்?
நேற்று என் பட்டு புடவைகள் எல்லாம் பழைய புடவைகளாய் வர்ணம் மாறி இருந்தன..
என்னவாம்???!!!
ஏன் என கேட்டதுற்கு.. " உனது ஸ்பரிசம் படாமல் இருபதைவிட.. உனது ஸ்பரிசம் படும் பழைய புடவைகளாய் மாறிடவே விரும்புகின்றதாம்...
ம்ம்ம் பாவம் அந்த புடவைகள் - இனி வரும் இரவுகளில் நீ அவைகளையே உடுத்திக்கொள்..
என்னங்க, அவை மட்டும் அப்படி என்றால் பரவாயில்லை??? மீதமுள்ள புடவைகள் யாவும் என்னுடன் வெளியே வர மறுக்கின்றது.... ஹும்ம் ஹும்ம் !!!!
இப்போ என்னடா தங்கம் அதுக்கு..
காரணம் கேட்டேங்க??
___ (விழி பிதுங்க) !!!???
என்ன சொல்லுச்சுன்னு கேட்க்கமாட்டிகளா ஹும்ம். போங்க நான் அப்பறம் உங்க கூட பேசமாட்டேன்...
???ம்ம் என்னவாம் டி அம்மு அதற்கு, சொல்லு.. நீ சொன்ன எனக்கு வேதவாக்குடா!! ம்ம்ம் சொல்லு சொல்லு மாமா கேட்டுக்குறேன்??
இரவில் உனது இனிமையில் லயித பின்பு அவைகள் வெட்கத்தில் வெளியே வர மனமில்லையாம் அன்பே.... இம்ம்ம்....
இப்போ என்னடி உனக்கு...புது புடவைகள் வேணும் அவ்வளவுதானே!!!... எடுத்துக்கோ.. உனக்கில்லாததாட....
ஹையா!!!!! என் மாமான மாமா தான். என் செல்லம்.. இருங்க சுட சுட போண்டா போட்டு எடுத்துட்டு வர்றேன்..... ( ஆரணி வாங்கலாமா இல்ல சாமுத்திரிக போதுமா.. ம்ம்ம் எது வாங்கலாம்)...
( ஆண்டவா 5000 துண்டுவிழும் இந்த மாசத்துல.. அதுக்கு மேல போகாம நீதான் அம்மு குட்டி மனச மாத்தனும் பத்துக்கோ.. அப்பறம் திருப்பதி உண்டியல உடைக்கணும்.. சொல்லிட்டேன் பார்த்துக்கோ ஆமா...)..
### ஊடல் தொடரும்####