பிறந்த ஊர்

ஏனோ தெரியவில்லை
துள்ளி விளையாடிய இடந்தான்
மூலை முடுக்கெல்லாம்
அத்துப்படி தான்
இருந்தாலும் தெரியவில்லை
மனதங்கே ஒட்டவிலை !
பிழைப்பிற்காக வேறோடு
வந்ததாலா?
உற்றதுணை, கற்றதுணை
எல்லாம் இருந்தாலும்
இரத்ததுணை இல்லாமல்
போனதாலா?
பிறந்து வளர்ந்த இடம்
நாற்றுக்கேது சொந்தம் ?
பிழைக்க பெயர்ந்த பின்பு
மண்ணுக்கு என்ன பந்தம்!!

எழுதியவர் : சங்கர் நீதிமாணிக்கம் (22-Aug-15, 8:31 pm)
சேர்த்தது : நீ சங்கர்
Tanglish : pirantha oor
பார்வை : 70

மேலே