கல்வியும் கரன்சியும்
.."" கல்வியும் கரன்சியும் ""...
மேகம்கள் சிந்திடும்
மழையும் கதிரவனின்
கொடூர வெப்பமும்
முற்றம்வரை வந்து
விசாரிக்கும் ஓடுயில்லாத
குடிசைக்குள் ஓடுகின்ற
எங்களின் வாழ்வு !!!
கல்லாத வேதனை
என்னோடு போகட்டும்
கஞ்சிக்கில்லா நிலை
வேண்டாம் இனியுமென்
பிள்ளைகளுக்கென்றே
கல்வியெனும் பந்தயத்தில்
ஓடிட துடங்கிவிட்டார் !!!
உடம்பில் வலுவிருந்தும்
ஓடிட தினவிருந்தும்
திண்டாடிப்போகிறோம்
விலைகொடுக்க முடியாத
விற்பனை பொருளாக்கி
கல்வியின் கடிவாளத்தை
பிடித்திழுக்கும் கயவரால் !!!
ஒருநாளும் வந்திடாத
ஓநாய்கள் ஓட்டுக்காய்
கால்களில் விழுந்தழுக
காசுக்காய் விற்றுவிட்டேன்
வறுமையின் காரணத்தால்
உரிமையை நானிழந்து
ஊமையாய் ஆகிவிட்டோம் !!!
வாக்களித்து வழிமொழிந்தால்
கல்வியை முன்னிறுத்தி
வாழ்வாதாரம் உயர்த்திவிட
காமராசரின் ஆட்சியினை
மலர்ந்திடவே செய்வதாய்
வாக்குறுதியை தந்துவிட்டு
போனயிடம் தெரியவில்லை !!!
உடல்விற்கும் விபச்சாரமும்
விலைபோன கல்விக்கும்
வித்தியாசம் அதிகமில்லை
கலாச்சாரத்தின் சீரழிவால்
தொடமுடியாத தூரத்தில்
ஏழைக்கு எட்டாக்கனியாய்
எட்டு சுரைக்காயானது கல்வி !!!
என்றும் உங்கள் அன்புடன்,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்....