பார்வையின் நாயகி

பார்வையில் மென்பனியா வாள்பார் சிலையவள்
பார்வை தவிர்த்து பனிப்போர் புரிந்திடுவாள்
பார்வை மொழிக்காத லாள்

இது இன்னிசை சிந்தியல் வெண்பா (மூன்று அடிகள் என்பதால் )
" ர் " எனும் எதுகை பயின்று வர பார்வை எனும் சீர் அடிகள் தோறும் வருவதால் ஒரு விகற்பம். ஆதலால் இது ஒரு விகற்ப சிந்தியல் வெண்பா.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

பார்வையில் மென்பனியாவாள்
பார் அவள் பொற்சிலையாவாள்
பார்வை தவித்தே அவள்
பனிப்போர் புரிந்திடுவாள்
பார்வை மொழியில் சொல்வாள்
காதல் காதல் என்றே !

----இலக்கணம் சாரா புதுப் பா வடிவம் . எது சிறப்போ ?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (23-Aug-15, 11:01 am)
Tanglish : parvaiyin naayaki
பார்வை : 106

மேலே