வாஸ்துஸ்ரீ

ஒம் பொண்ணு பேரு என்னய்யா?

வாஸ்துஸ்ரீ-ங்க.

என்ன ஒன்னப் பாத்தா படிக்காதவன் மாதிரி இருக்கற. பொண்ணுக்கு நல்ல அழகான இந்திப் பேரா வச்சிருக்க?


இல்லங்க. இப்ப எதுக்கெடுத்தாலும் எல்லாம் ’வாஸ்து’ ‘வாஸ்து’ன்னு அடிக்கடி சொல்லறாங்க. ஏறக்குறைய நம்ம ஊர்லே இருக்கற 90% க்கும் அதிகமான கொழந்தைங்களுக்கும் வாயில நொழையாத அர்த்தம் தெரியாத இந்திப் பேருங்களா வச்சிருக்காங்க.நான் கூலி வேலைசெய்யறவங்க. . ‘வாஸ்து’ங்கற வார்த்தையை நான் வேலைக்குப் போற எடத்திலெல்லாம் கேள்விப்பட்டிருக்கேன். அது தான் எம் பொண்ணுக்கு ‘வாணிஸ்ரீ’, ’ஜெயஸ்ரீ’ -ங்கற மாதிரி ’வாஸ்துஸ்ரீ’-ன்னு பேரு வச்சிட்டேன். ஊரிலெ எல்லாரும் அவுங்க கொழந்தைங்களுக்கு இந்திப் பேர வைக்கற போது நாமட்டும் தமிழ்ப் பேர வச்ச நல்லாருக்குமுங்களா?

நீ சொல்லறதும் சரி தான்.

-------------------------------------
சிரிக்க அல்ல. சிந்திக்க. தமிழ்ப் பற்றை வளர்க்க.
--------------------------------

எழுதியவர் : மலர் (23-Aug-15, 1:15 pm)
பார்வை : 161

சிறந்த நகைச்சுவைகள்

மேலே