ச்சும்மா ஒரு காதல் கவிதை

ச்சும்மா ஒரு காதல் கவிதை

இன்று மழை ஏதுமில்லையே...
பின் எப்படி
நீ வரும் வழி தோறும்
கிளைகள் பச்சையம் பூசி
நிற்கின்றனவே...
ஓ.. உன் துப்பட்டா
தொட்டுப் போனதாலா ?

@ @ @ @ @

அழகிய பெண்களை படைக்க
பிரம்மன் வைத்திருக்கும்
அச்சுப் பிரதி நீ ..!

@ @ @ @ @

நீ நடக்கிறாய்..
உன் காதில் தொங்குகிறது
என் இதயம்..!

@ @ @ @ @

தலைப்பு செய்தி என்பது...
உன் தலைப்பூ பற்றிய செய்தி..!

@ @ @ @ @

மழை பெய்யும் போதெல்லாம்
கூப்பாடு போடுகின்றன
மனத் தவளைகள்..!

@ @ @ @

நான் கவிதை சொல்லும் போதெல்லாம்
'சும்மா இரு' என வெட்கிச் சொல்லுகிறாய்..
நானும் அதையே தான் சொல்கிறேன்
கொஞ்சம் சும்மா இரு..
இருக்க விடு..!

@ @ @ @ @

எழுதியவர் : வெள்ளூர் ராஜா (24-Aug-15, 9:39 am)
பார்வை : 459

மேலே