தயங்கித்தான் போகிறேன்

நீ உறங்கிச் செல்வாய்
என்ற ஆசையில்
இதழ் விரித்த பூக்கள்
நீ கண்டு கொள்ளாமல்
செல்வதால் உதிர்ந்து
காய்ந்து விடுகின்றன..!!
உன் மீது உறங்கிச் செல்வோம்
என்ற ஆசையில்
பயம் மறந்து குதித்த
மழைத்துளிகளை மறைத்து
நீ குடை விரித்ததால் உடைபட்டு
உயிர் விடுகின்றன..!!
உன் தோல் மேல்
உருண்டு கிடப்போம்
என்ற ஆசையில்
உன்னை விரட்டிப் பிடிக்க
வந்த தென்றலை
சன்னல் மூடி துரத்தியதால்
மின்னல் வேண்டி தற்கொலை
செய்து விடுகின்றன..!!
இந்த இயற்கையினைப் போல்
எனது இதயத்தினையும்
தவிக்க விட்டுவிடுவாயோ..??
தயங்கித்தான் போகிறேன்
தாமரையே..
தினமொரு ஒற்றை
ரோஜாவுடன்..!!
செ.மணி