ஏமாற்றம்

இருளின் பார்வையில்
சிக்கி தவிக்கிறது
என் இதயம்...
துடுப்பாக எவரேனும்
கரம் கொடுத்தால்
நலமாய் இருக்கும்
என்கிறது என் மனம்...
சுற்றி ஆயிரம் பேர்
இருந்தாலும் துணை
என்று யாருமில்லாததை
போல் ஓர் திக்ப்ரமை..
உறவுகளும் அன்பும்
சுயநலத்தின் வியாபார
யுக்தி என்று
பஞ்சபூதங்கள் உரைப்பதை
போல் ஓர் உணர்வு...
என்ன செய்வது
ஏமாற்றம் என்றாலே
இதல்லாம் நடப்பது
சகஜம் தானே
போய் வேலையை பாரு
என்கிறது மூளை...
மூளை உள்ள மனிதன்
பிழைத்து கொள்வான்...ஆம்!
சரியாக தான் சொல்லி இருக்கிறார்கள்...

எழுதியவர் : இந்திராணி (24-Aug-15, 11:24 am)
Tanglish : yematram
பார்வை : 82

மேலே