சிறுவர்களுக் கெதிரான தீவிரவாதம் அற்ற உலகு…
தீவிரவாதம் என்பது மனித இனத்திற்கெதிராக உருவாக்கப்பட்ட ஓர் விடயமாகும்.
தீவிரவாதம் என்பது உலகில் அதிகம் தாக்கத்தினை செலுத்துவது அப்பாவி குழந்தைகளைத்தான் .தன் கண் முன்னே தனது தாயின் மரணத்தை பார்த்த அதுவும் துப்பாக்கி முனையில் கொலைசெய்யப்பட்டதை கண்ட அந்த ஆறு வயது குழந்தையின் உள்ளம் எவ்வாறு இருந்திருக்கும்…..(மஃஷுமா இஸ்கந்தரி- ஈரான்)
பெற்றோரின் வரவினை எதிர்பார்த்திருக்கும் குழந்தைகள் : வீடு திரும்பாத நிலையினை எதிர் நோக்கும் உள்ளங்கள்……..
தந்தை இழந்த குழந்தை : தன் தந்தையின் வரவுக்காக கூறும் கவிதை…
அனைத்து குழந்தைகளும் தனது தந்தையுடன் விளையாடும் தருணத்தை நோக்கும் பொழுது எதிர்கொள்ளும் வேதனை நிறைந்த வார்த்தை வரிகள்……
ஏகாதிபத்தியம்: சர்வதேச பயங்கரவாதம் :அமெரிக்கா .
தனது 3 வயது நிரைந்த சகோதரியின் தீயுட்டப்பட்ட நிகழ்வு ; கண்டது 5 வயது நிரைந்த குழந்தை…
துல்ஹஜ் 18(இஸ்லாமிய மாதத்தில் இறுதி மாதம்) , பேரூந்தில் சிறுகுழந்தைகள்….வயோதிபர்கள்…..என பயணிக்க அந்தப் பேரூந்தில் குண்டு வெடிப்பு...
தந்தை தனது சகோதரியினை காக்க…தாய் தனது சிறு மகனை காக்க….சகோதரிகள் ……? தன் சகோதரியின் ஷஹாத்ததை கண்ட சகோதரி…தன் வாழ்வில் படும் வேதனை…..இவர்களின் குற்றம் என்ன?
உடல் கொண்ட காயம் மருந்தினால் ஆற்றப்படலாம்…..உள்ளம் கொண்டது…?
இன்று உலகின் அனைத்து மூலைகளிலும் தீவிரவாதம் .
உலக சர்வாதிகாரம் இன்று தீவிரவாதத்தினை ஊக்குவிக்கின்றது.தனக்குள்ளே அதனை மூடிவைத்துக் கொண்டு உலகிற்கு தான்தான் தீவிரவாதத்தின் முதல் எதிரி என வியாக்கியானம் பேசுகிறது.
உரிமைகளை பாதுகாக்க வேண்டிய ஐக்கிய நாடுகள் சபை இன்று அநியாயத்திற்கு துணை நிற்கின்றது.
எப்போது விழித்துக்கொள்ளும் தூங்கிக் கொண்டிருக்கும் மனித குலம் ; இவ்வுலகின் கடைசிப் பக்கம் என்று ஒன்றிருந்தால் அங்கும் நான் சென்று சொல்லத் தயார் மனிதம் என்றோ மரித்துவிட்டது என்று....
என்றும் இவன்
மரித்த மனிதமின் ஓர் சிறு விம்பமாய்....