ஏன் எழுதிக்கொண்டே இருக்கிறேன்
எழுத்து.காம்
எனக்கு பிடித்தது முதல் நாள்,
என் எழுத்து எனக்கே பிடித்தது மறு நாள்
படித்து பார்த்தேன் மறுபடியும்
பாங்குடன் வந்ததே மீண்டும் மீண்டும்
பார்த்து ரசித்தனர் நண்பர்களாயினர்
பரவசம் ஆனேன் இது ஒரு புதுவித பிரவேசம்
இங்கு யாரும் தருமியல்ல
எனக்கு யாரும் போட்டியல்ல!
ஆனாலும் நக்கீரர்கள் உண்டு
நல்ல செய்தி தான்
நான் விரும்பும் எழுத்து
என்னை எழுத வைத்து
அழகாக்குகிறது
என்னையும் என் எழுத்தையும்.
நன்றியுடன்
செல்வமணி