சாயம்

உணவு விடுதி அருகில் அந்த கார் வந்து நின்றது. அதிலிருந்து வெளிப்பட்ட அந்த நவநாகரிக மனிதர்களைப் பார்த்து வணக்கம் வைத்தார் அந்த கிழவர். மேல் சட்டை அணியவில்லை, வட்ட மூக்குக் கண்ணாடி, முதிர்ச்சியினால் தள்ளாடும் கால்கள், உடல் முழுவதும் வெள்ளி நிறச் சாயம் வேறு பூசியிருந்தார். பார்பதற்கு ஏதோ வேடம் அணிந்திருப்பது போல இருந்தது. வணக்கம் வைத்த கைகளை மெதுவாக கீழே இறக்கி ஏந்த தொடங்கினார் அவர்.
காரிலிருந்து வெளிப்பட்ட மனிதர்கள் அவரை வியப்புடன் பார்த்தனர், சிலர் அவருடன் புகைப்படம் எடுத்துகொள்ள ஆயத்தமானார்கள் அபொழுது அங்கு சாயம் பூசாத ஒரு கிழவரும் கையேந்தியபடி வந்தார். ஆனால் அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. சாயம் பூசிய அந்தக் கிழவரிடம் பத்து ரூபாய் "காந்தி" தாளைக் கொடுத்துவிட்டு புகைப்படமும் எடுத்துக்கொண்டனர் சிலர்.
சாயம் பூசாத அந்த மனிதர் அடுத்து வந்து நின்ற இன்னொரு கூட்டத்தை பார்த்து கையேந்தியபடி சென்றார்.

எழுதியவர் : நந்தகுமார் பாலசுப்ரமணியம (24-Aug-15, 9:52 pm)
Tanglish : saayam
பார்வை : 170

மேலே