திருமணமாண ஆணும் பெண் தோழிகள் நட்பும் - பதிவு இரண்டு
மணமான ஆண் மகிழம்பூ போன்றவன்
மகிழ்ச்சியின் எல்லை தொட்டவன்
குணம் குழைந்து கண்ணியம் தழைய
ஒருவனுக்கு ஒருத்தி எனும் ஒழுக்கத்தில் சமைந்தவன்
அவன் தான்
இன்றைய சூழலில் ஆரோக்கியமான சமூகத்தின்
ஆளுமை கொண்ட அடையாளம்,
அவன் வசம் தான் எதிர் காலத்தின்
வேர்கள், விழுதுகள்
அவனின் கையாளும் விதம் தான்
சமூகத்திற்கு தடங்கள் தடயங்கள் வழிகள் வாய்ப்புகள்
இன்றைய காலகட்டம்
ஆணும் பெண்ணும் சேர்ந்து கடமை ஆற்றும் பாங்கு
அவசியமானது தேவையானது மிக தெளிவானது
அப்படியொரு ஆரோக்கிய நட்பு
நல்லதொரு பண்பாட்டுக்கு கலங்கரை விளக்கம்!
நாட்டுக்கு தேவையான அழகூட்டும் ஆலயம்!
போதைகவிஞர்கள் எட்டுக்கட்டி பாடிய
போலி தாஜ்மகால் காதல் கட்டுக்கதைகள்
காலமாற்றத்தின் சரித்திர பூகோள 'பாடி லாங்குவேஜின்
தோற்றுப்போன 'கெமிஸ்ட்ரி' கள்
இனி அவை இன்றைய நாளைய பண்பாட்டின் படிக்கட்டுகள்
ஆருசி கொலை ஆசிட் குற்றங்கள் இந்திய பண்பாட்டிற்கு
இழுக்கு சேர்க்கும் மற்றும் சில ஏற்புடையா குற்றங்கள்
மாறவேண்டிய இவை நாளைய இந்தியாவின்
நடைமுறை சிக்கல்கள், இன்று மட்டுமே.
மாற வேண்டி மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளின் தாக்கமே
இந்தக்கவிதை!
அன்பு அழகு பண்பாடு இன்னும் பண்பட
கூட்டுக்குடும்பம் இந்திய கலாச்சாரத்தின் தலைக்கவசம்
அதை பேணுவதே இன்றைய தலையான கடமை.
அந்த சமூக சிந்தனையே இன்றைய சதிராடும்
இளைய சமுதாயத்திற்கு அச்சாணி ஆணிவேர்
அதுவும் ஆண்-பெண் சரி சமம் என்ற வாக்குக்கு
அச்சாரம் இடுவதே நட்பெனும் நங்கூரம்
மேற்கத்திய கலாச்சாரம் மேலாடையில் மட்டுமே
அது அழகுக்கு அழகு சேர்க்கும், அனுமதிப்போம்
கல்வி சாலையில் பணிமனையில் எங்கெங்கும்
ஆண்-பெண் சரி சமமாக இணைந்து செல்ல
அழகு கூடும் அறிவு மேவும்
ஆண்துணை ஒரு யானைபலம்
பெண் துணை ஒரு பெருமை மேகம்
ஆண் பெண் நட்பு லயம் சேர்க்கும் தாள நயம்
நம் மேல் நாம் இன்னும் கொஞ்சம்
கவனம் எடுத்து கொள்ளும்
மூன்றாவது கண் முறை சாற்றும் பண்.
வெற்று உறவு மட்டுமே வாழ்வல்ல
அறிந்த மனங்கள் நிஜத்தில் அடைய துடிப்பது ஆறுதலை,
அதனை புரிந்து கொள்ளல் அவசியம்
அப்போது மட்டுமே உறவுகள் வலுப்படும், இனிமை கூடும்.
நிறையப் பெண்களுக்கு பேச்சுப்பிடிக்கும், மிக மிக பிடிக்கும்
அன்பான, ஆறுதலான பேச்சும் பேசிக்கொண்டே நடப்பதுவும்
பேச்சின் மூலம் அன்பை, நட்பை பகிர்ந்து கொள்வது
அவர்களுக்கு பிடிக்கும் என்பதை யாரறிவர்?
நீண்ட தூரம் நடந்தபடி பேசுவது என்பது
இருவரது மனங்களையும் இலேசாக்க உதவும்.
இது கூட ஒரு அருமையான அனுபவமே
நான் உன்னை எந்த அளவுக்கு நேசிக்கிறேன் என
பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள அந்த பேச்சு நடை உதவும்.
சிலருக்கு ஏன் பலருக்கு தங்களது
புறத்தோற்றம் குறித்து புரியாதோரு கவலை இருக்கும்,
தங்களை கூடுதலாக அழகாக்கிக் கொள்ள
விரும்புவர், முயற்சிப்பர்
பெண் ஆணை நட்பு பாராட்டுகையில்
ஆணும் பெண்ணும் புறத்தோற்றம் பற்றி
கவலைப்படுவது இல்லை.
உன் அழகு உருவத்தில் இல்லை, மனதில்தான் இருக்கிறது,
உனது பேச்சுதான் உனக்கு அழகு, உனது சிரிப்புதான் அழகு
என்று நம்பிக்கையூட்ட வேண்டும்.
அது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்
அப்படிப்பட்ட ஆண்கள்தான் உண்மையில்
பெண்களுக்கு பெரும் துணைவர்களாக முடியும்.
வாழ்வியல் ஒரு பேரியல்
நலனை மட்டுமே நாடும்
நாசூக்கான 'சோசியல்'
நட்பு என்பதே நாலு திசைக்கும் ஏற்ற இயல்
பன்னாட்டுக்கும் பெண் நாட்டுக்கும்;
உணர்ந்திடில் உண்டு நமக்கு வாழ்வு - ஈடில்
தேகம் சேதமாகும் தேசம் நாசமாகும்
அறிவீர், புரிவீர், தெளிவீர்!