அச்சாணி

கடமை நமது உரிமை
மனிதன்ஒவ்வொருவரும்
தன் தன் கடமையில் இருந்து நழுவாது
தாய் தந்தை சகோதரர் மனைவி பிள்ளைகள்
என்று தொடர்ந்து வரும் உறவுகளின் தேவைகளையும்
அடுத்தவர் தேவைகளையும்
அடுத்தவர்களை எதிர் பார்க்காமல் தன் கடமைகளையும்
நிறைவேற்றும் போது மன நிறைவடைகிறான்
அவன் தான் மனிதன், மனிதருள் மாணிக்கம்,

அவனால் வாழ்பவர்களும் பிழைப்பவர்களும்
அடையும் மகிழ்ச்சியே அவனுக்கு நிம்மதியும் சந்தோஷமும்
உலகில் மனிதனாகப் பிறந்ததின் அர்த்தம் அதுவே
அதைப் பார்த்து பார்த்து அடுத்தவனும்
தன் கடமையில் இருந்து தப்பிச் செல்ல மாட்டான்
எல்லா உறவையும் விட்டு விட்டு தான் மட்டும்
தன் குடும்பம் என்று தனியாக வாழ முற்பட்டால்
அவன் சுயநல வாதி

சுயநலம் கொள்பவன் அற்பத் தனம் உள்ளவன்
பிறர் நலம் காப்பவன் இறைவனின் அவதாரம்
எல்லோர்க்கும் இந்த அவதாரம் கிடைப்பதில்லை
ஏன் அவர்கள் பிறர்நலம் பேணுவதில்லை
முயற்சிப்பதும் இல்லை ,
மனிதன் ஒவ்வொருவரும்
தம்மைக் காப்பதும் மக்களைக் காப்பதும்
தம் கடமை என்று நினைத்து விட்டால்
ஒவ்வொரு மனிதனிலும் இறைவன் இருக்கின்றார்

அச்சாணி இல்லாத் தேர் முச்சாணும் ஓடாது
இவுலகின் அச்சாணி நாமாக இருந்து விட்டால்
உலகம் எனும் வண்டியில் மக்கள் எனும் தேர்
சுலபமாக இன்பமாக அமைதியாக நகர்ந்து செல்ல முடியும்
எல்லாம் மனிதன் கையில்தான் உள்ளது
அவனவன் கடைமைகள் சீராக நடந்தால்
சொர்க்கமும் காண முடியும் பூமியில்
கடமை இது கடமை உரிமை நமது உரிமை

எழுதியவர் : பாத்திமா மலர் (25-Aug-15, 10:32 pm)
Tanglish : assaani
பார்வை : 315

மேலே