சூடு சொரணை ஏதும் உனக்கு இல்லையா

புத்தர் ஒருமுறை கிராமங்கள் வழியாகப் போய்க்கொண்டிருந்தார். ஒரு கிராமத்தில் அவருக்கு ஏகப்பட்ட மரியாதை.

அடுத்த கிராமத்தில் ஏகப்பட்ட திட்டு, வசைமொழி, அவமானப் படுத்தல்கள். புத்தரோ அமைதியாய் இருந்தார். அவமானப் படுத்தியவர்களுக்கே அவமானமாகி விட்டது.

“யோவ்.. இவ்ளோ திட்டறோமே, சூடு சொரணை ஏதும் உனக்கு இல்லையா?” என்று கடைசி யில் கேட்டேவிட்டார்கள்.

புத்தர் சிரித்தார்.

“இதுக்கு முன்னால் நான் போன கிராமத்தில் ஏகப்பட்ட பரிசுப் பொருட்கள் கொடுத்தார்கள். எனக்கு எதுவுமே தேவையில்லை என திருப்பிக் கொடுத்துவிட்டேன். இங்கே ஏகப்பட்ட வசை மொழிகள் தருகிறீர்கள். இதையும் நான் கொண்டு போகப் போவதில்லை. இங்கே தான் தந்துவிட்டுப் போகப்போகிறேன். எனவே என்னை எதுவும் பாதிக்காது” என்றாராம்.

நம் மனது முடிவெடுக்காவிட்டால், யாரும் நம்மை காயப்படுத்த முடியாது எனும் உளவியல் உண்மையைத் தான் புத்தர் தனது வாழ்க்கையின் அனுபவம் வாயிலாக விளக்குகிறார்.

(முகநூலில் படித்தது)

எழுதியவர் : செல்வமணி (27-Aug-15, 12:57 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 270

மேலே