காற்றாய்

கண்களின் முன் யாவும்
கள்ளி அவளின் காற்றுப் பிம்பம்!

தொட்டு அணைக்கவும் முடியாது
தொடங்கி பேசவும் முடியாது!

என்னை சூழ்ந்த காற்றாய்
எங்கும் சூழ்ந்து இருக்கிறாள்!

என் மகிழ்ச்சியில் தென்றலாக,
என் கோபத்தில் புயலாக,

எல்லையில்லா ஆனந்தத்தை - என்றும்
எனக்கு அள்ளி தருகிறாள்!!!

எழுதியவர் : தமிழரசன் (27-Aug-15, 2:16 pm)
சேர்த்தது : தமிழரசன்
Tanglish : kaatraai
பார்வை : 86

மேலே