தெய்வீகக்காதல் - PLATONIC FRIENDSHIP

நான்
எதிர்பார்க்காத சமயத்தில்
எக்கச்சக்கமான முத்தங்களை
நிரப்பி விடுகிறது
உன்
குறுஞ்செய்தி....

என்
கைபேசியின்
இதயப் பைக்குள்
இடமில்லாதபோது
உன்
முத்தக்கொஞ்சல்களை
அழித்து குப்பைத்தொட்டிக்குள்
மூடிவிட் முயலும்போது
என்
காதல் கற்பப்பை வலிக்கிறது....


எப்போதாவது
அதிசயமாய் - நீ
என்னைபார்த்து
"போங்க" என்று
சொல்ல்ம்போது -என்
மனைவியின் மரியாதையை
தீண்டுவதாய்த் தோன்றுகிறது...

மனம் வாடிக்கிடக்கும்போது
என்னைத் தேடிவந்து
சில நொடிகளில்
ஆற்றுப்படுத்தும் அம்மாவாக
அவதாரமகிறாய்...

பெண்மையின்
உண்மையை முழுவதுமாய்
வெண்மையாய் வெளிச்சம்போட்டுச் சொல்லும்
வெளிச்சப்பூவடி நீ..!


இவ்வளவும் படித்த
என் எழுத்து
நண்பர்களுக்கு
அந்த முத்தக் கொஞ்சல்
மட்டும்
உறுத்தலாம்...?



அதைப்பற்றி
நமக்கெதற்கு கவலை...!


மீண்டும் மீண்டும்
முத்தமிடுவாயாக...



நீ கொடுத்த
முத்தமெல்லாம்
என்
முதல் குழந்தையின்
பெயருக்குத்தான்
என்று சொல்லாமல் கொடு!


என் மனைவிக்கு
உன்னை
சொல்லமுடியாத அளவிற்கு
பிடிக்கும்
என்பதால்தானே
"உன் பெயரையே"
என் மகளுக்குச்
சூட்டியிருக்கிறாள்..!


உடல்
உறவு இல்லாத
உணர்ச்சிமிக்க காதல் தானடி
நம் நட்பு!


ஊரைப்பற்றி
நமக்கெதற்கு கவலை?

எழுதியவர் : திருமூர்த்தி (27-Aug-15, 7:07 pm)
பார்வை : 181

மேலே