நண்பர்களின் சந்திப்பில்....
இலையுதிர் காலத்தில்
இடமாறிய
இதயங்கள் சில
வசந்தகால மழைத்துளிகளின்
ஈர நினைவுகளை சுமந்து
சந்தித்து கொள்கின்றன....
கல்லூரி கடந்த நட்புகள்
மீண்டும் ஒரு சந்திப்பில்
கல்லூரி நாட்களை அசை போட்டு
திரும்பவே இந்த சந்திப்பு....
வகுப்புக்கே வராத நண்பன்
முதல் ஆளாய் வந்து நிற்கிறான்
நண்பர்களை வரவேர்க்க....
அலைபேசியின்
அவசர அழைப்புகள் அனைத்திலும்
நண்பா வந்துகொண்டிருக்கிறேன்
பதிலாய் சீக்கிரம் வாடா....
நண்பர்களின் கூட்டம் சேர
ஒருவர் மேல் ஒருவர் அமர
தோள்களும் கால்களும்
பாரம் கொள்ளவில்லை மாறாக
சில பாரங்கள் இறக்கிவைக்கப்பட்டது
நண்பர்கள் மத்தியில்.....
கவலைகள் மறந்தது
எங்கோ ஒளிந்திருந்த
குறும்புகள் மீண்டும் சிறகு விரிக்க
வாய் வலித்தது புன்னைகையால்
மீண்டும் பல வருடம் கழித்து....
நலம் விசாரிப்பில்
குடும்பம் கசந்தாலும்
வர முடியாத நண்பனை பற்றியே
அதிகபடியான விசாரிப்புகள்....
வாய் பேச முடியாத
நண்பனின் கை அசைவுகள்
அனைத்திலும் புரிந்தது நண்பா நலமா.?..
கை ஊனமான நண்பனின்
உருக்கமான சில வார்த்தைகள்
கண்ணீரோடு வந்தாலும்
அந்த கண்ணீரை துடைக்க
இங்கேதான் கைகள் அதிகம்....
பேசினார்கள்
பேசினார்கள்
பல வார்த்தைகளும் அதில்
கலந்திருக்கும் வலிகளுக்கும்
இங்கேதான் மருந்து கிடைக்கும் ஆதலால்....
மரியாதை கலந்த வார்த்தை
இங்கே கெட்ட வார்த்தை
உயர்ந்த மரியாதையை
இதயம் கொடுத்துவிட்டது நண்பன் என்று ஆதலால்...
நேரத்தின் சந்திப்பு
குறைய தொடங்க
ஒவ்வொருவராய் மீண்டும்
பிரியாமல் பிரிந்தனர்,,,,,
மீண்டும் சந்திப்போம்
என்ற வார்த்தையில் மறைந்து ஒலித்தது
எப்பொழுது எங்கே
அந்த நிமிடங்கள் நிஜமாகுமா.?...
எங்கு தொலைத்தோம்
ஏன் தொலைத்தோம்
சில சந்தோஷ நிமிடங்களை....
பதில் தர யோசிக்க நேரமில்லை
கிளம்ப வேண்டும் நேரம் கடக்கிறது,,,,,
இன்றிரவு என் தலையணை நனைக்கும்
கண்ணீர் சொல்லும்
என் நண்பர்கள் பிரிந்த நிமிடத்தை....
சிரிப்பேன்
ரசிப்பேன்
ஏங்குவேன்
மீண்டும் கிடைக்காதா அந்த கல்லூரி வாழ்க்கை.....