நினைவே சிந்தையில் கலவாதே

நினைவே! சிந்தையில் கலவாதே,
நீ கலந்தால் கண்ணீர் வருகிறதே!

கனவே! கண்களைத் தொடராதே,
நீ தொடர்ந்தால் காதலும் தொடர்கிறதே!

புன்னகைப் போலே பொன்மலராய்,
என் உள்ளத்தின் உள்ளே பூத்திருந்தாய்!

மென் புன்னகைப் போலே பொன்மலராய்,
உன்னை உள்ளத்தில் இவனும் வைத்திருந்தான்!

இன்பத்தின் வாசல் மூடியதும்,
என் துன்பத்தின் கதவைத் திறந்துவிட்டாள்!
என் துன்பத்தின் உள்ளே இவளிருந்தாள்!

எழுதியவர் : பெருமாள் (29-Aug-15, 3:38 pm)
பார்வை : 112

மேலே