தந்தையாகி,தமையனாகி, தோழனானவன்

பெருங்கூட்டத்தில் என் ஆடைகள் லேசாக விலகியதை...
நீ கண்களால் உணர்த்தியது எத்தனை முறை நினைத்தாலும்
என் இதயத்தை உறுத்தியது இல்லை!!! அன்று
நட்பின் கதவுகள் திறக்கப்ட்ட நாள்..

மழை வருகையிலே
ஒரு குடையின் கீழ்
நாம் சிரமப்பட்டு நடந்தது கொண்டிருந்த போதும்..
உன் மனைவிக்கு அவசரமாய் கைப்பேசியில் அழைத்து.. மழை வருகிறது கண்ணம்மா உன்னோடு இருக்க மனம் ஏங்குகிறதே!!!
என்ன செய்ய இந்த வளர்ந்த குழந்தை தங்கம்மாளை தனியே விட மனமில்லை என அலுத்துக்கொண்டாய்....
பத்திரமாக அவர்களை வீட்டில் விட்டு
நீங்கள் பத்திரமாக வாருங்கள் என்றாள் உன் மனைவி!!!!!!

எனக்கு திருமணமப்பேச்சு எடுத்தபோது..
ஐயோ இவள் எப்படி தனியே சமாளிப்பால்,அனைத்து வேலைகளும் அவள் தானே செய்ய வேண்டும்.. அவளுக்கு போகிற ஊர் ஒத்துக்கொள்ளுமா? கொஞ்சம் அதிகமாக வெயில் அடித்தாலும் தாங்கமாட்டாளே இப்படி எல்லாம் தினம் புலம்பிக் கொண்டிருக்கிறார் . அப்பப்பா
எனக்கே உங்கள் நட்பை பார்த்தால் பொறாமையாய் இருக்கிறது என என் தலை வருடிக்கொண்டே உன் மனைவி சொன்ன போது உணர்ந்தேன்......
நீ அவளிடம் எவ்வளவு உண்மையாக இருக்கிறாய் !!
அதனால் தான் பொறாமை கொண்டாலும் நம் நட்பை நேசிக்கிறாள்....
உங்கள் பார்வைகள் ஒன்றாக இருக்கிறது என்று!!!

என்னை ஏன் தங்கம்மா என அழைக்கிறாய் பழைய காலத்து பெயரடா அது
இப்படி பொய் கோபம் கொண்டு நான் கேட்ட போது
நீ தந்த பதில்...
என் பெயர் என்ன?
பாரதி

ம்ம்ம்.... நீ என் கைகளை முதன்முதலாய் உன் குழந்தை கரங்களை கொண்டு தீண்டிய போது... தங்கம்மாளை பெற்ற பாரதியாரின் பூரிப்பு என்னையும் தொற்றிக்கொண்டது
அதனாலே தான் உன்னை தங்கம்மாள் என அழைக்கிறேன்
தங்கம்மா ..என்றாய்

என் திருமணம் முடிந்த பின் நீயும் நானும் வெளியே சென்ற போது....
நம்மை காண்போரெல்லாம்
கணவன் மனைவி என எண்ணிக்
கொள்வார்களோ
இப்படி நான் ஐயம் கொண்டேன்

என் கவலை தீர்க்க நீ ஆற்றிய சொற்பொழிவு இன்றும் இனிக்கிறது

கண்டிப்பாக நம்மை பார்ப்பவர்கள் அப்படி தான் நினைப்பார்கள்..
காரணம் என்ன தான் நாம் முன்னேற்றம் அடைந்தாலும்
நம் சமூகத்தின் பார்வை பின் தங்கிதானே உள்ளது
பெண்களுக்கு என தனி ஒரு வட்டம்
ஆண்களுக்கு என தனி ஒரு வட்டம்
வட்டத்தை விடுத்து வெளியே செல்வோரை வட்டத்தில் உள்ளவர்கள் உற்று நீக்குவதில்
ஆச்சரியம் என்ன ?? தங்கம்மா

உற்று நோக்கும் பார்வைகள்
நம்மை தின்றாலும் பாதகமில்லை
பசி ஆறிய பின்
இந்த தனி தனி வட்டம்
பூமியைப் போல ஒரே வட்டமாகும்....

பேரமைதி என் உள்ளத்தில்

சஞ்சலம் சத்தியமாக
தோன்றியதும் இல்லை
தோன்றவும் இல்லை
தோன்றப்போவதும் இல்லை

இவன்
என்
தந்தையுமாகி
தமையனுமாகி
தோழனும் ஆனவன்

இவன்
என் நண்பன்!!!!

எழுதியவர் : சாய் பூங்குழலி (29-Aug-15, 5:06 pm)
பார்வை : 114

மேலே