மரணத்தை தழுவினரே

கார்மேகம் சூழ்ந்திருக்க
படபடவென வந்ததோ
இடியும் மின்னலும்

பலமுறை தாக்குவதுபோல்
வந்த மின்னலைக்கண்ட
பேருந்து ஓட்டுனர் சொன்னார்

பேருந்திலிருக்கும் நம்மிலோருவர்
இன்று சாவது நிச்சயம் அதுதான்
மின்னல் தாக்குவதுபோல் வருகின்றது

என்று பயந்து கூறியவர்
சட்டெனெ ஒரு மரத்தின்
பக்கத்தில் நிறுத்தினார் பேருந்தை.

ஒருவருக்காக ஏன் எல்லோரும்
சாகவேண்டும் ஒவ்வொருவராக
மரத்தினை தொட்டுவர பணித்தார்

இடியின்போது மரத்தடியில்
நின்றால் அவரைத் தாக்கும்
எனச்சொல்லி முதலில் தொட்டு வந்தார்

அவரைத்தொடர்ந்து மற்றவர்களும்
ஒவ்வொருவராக மரத்தினை
தொட்டுவந்தனர் ஒன்றும்நடக்கவில்லை

கடைசி நபர் உண்மையிலே
பயந்துவிட்டார் ஆகையினால்
மரத்தினை தொடவும் மறுத்துவிட்டார்

ஆனால்எல்லோரும் வற்புறுத்தவே
கலக்கத்துடன் மெல்ல மெல்ல
தயக்கத்துடன் மரத்தினை தொட்டார்

அவர் மரத்தினை தொடவும்
படாரென்று தாக்கியதோ மின்னல்
பேருந்தினை இறந்தனர் அனைவரும்.

இத்தனை நேரம் அந்த ஒருநபர்தான்
அவர்கள் அனைவரையும் காத்துநின்றார்
எனப்புரியாது மரணத்தை தழுவினரே

(படித்ததில் பிடித்த சம்பவம்)

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (29-Aug-15, 7:59 pm)
பார்வை : 85

மேலே