நினைவுகளுடன்

அன்று போல்
இன்று நீ
இல்லை
இன்று போல்
அன்று நான்
இல்லை

ஆனால் இன்றும்
உன் நினைவுகளுடன்
வாழ்க்கின்றேன்

மனம் கொண்ட
பின்னும்
முன்னம் மனத்தின்
மணம் வீசுகின்றது

பிழை என
புரிந்தும்
வீசுவதை வீசி
ஏறிய இது
மண் அல்லவே
மனம்

காதலின் விதிமீறலை
நான் மீறேல்
ஒருபோதும்
உன்னுடன் இருந்த
காலத்திலும் கூட

ஆனால் இன்றோ
மனசாட்சியிடம்
மாட்டி கொண்டு
தவிக்கின்றேன்

எழுதியவர் : கமலக்கண்ணன் (29-Aug-15, 10:32 pm)
Tanglish : ninavugalutan
பார்வை : 154

மேலே